2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வெற்றிலைக்கேணி காணி அளவீடு கைவிடப்பட்டது

George   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்காக நில அளவையாளர்களால் இன்று திங்கட்கிழமை (29) நிலஅளவீடு செய்ய  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காணி உரிமையாளர்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

மண்டலாய், தட்டாங்கோடு, புல்லாவெளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 700 ஏக்கர் அளவிலான காணியை படையினர் தங்கள் பயிற்சி தேவைக்கென கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக நில அளவீடுகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதியும் நில அளவையாளர்கள் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினையடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, மீண்டும் நில அளவை செய்யப்போவதாக நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதன்போது, அங்குகூடிய பொதுமக்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் காணி அளவீடுகள் செய்வதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து, காணி அளவீடு செய்யும் பணிகளை நிலஅளவையாளர்கள் கைவிட்டு சென்றனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணி உரிமையாளர்களோடு சேர்ந்து அங்கு வருகை தந்திருந்த வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபை உப தலைவர் கந்தசாமி சதீஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .