2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காரைநகர் பேருந்து நிலையத்திலிருந்து சி.சி.டி கமரா அகற்றப்பட்டது

Kogilavani   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காரைநகர் பேருந்து நிலையத்தில் தனியார் ஒருவரால் பொருத்தப்பட்டிருந்த 6 சி.சி.ரி கமராக்களை புதன்கிழமை (01) அகற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகர் பகுதியை சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்து இலண்டனில் வசித்து வரும் ஒருவரே இந்த சி.சி.ரி கமராக்களை பொருத்தி, காரைநகரில் நடைபெறும் விடயங்களை அவதானித்து வந்துள்ளார்.

மேற்படி நபர் காரைநகர் அபிவிருத்தி சங்கத்துக்கு நிதியுதவி செய்பவர் என்றும், இவருடைய நிதியுதவிலேயே காரைநகர் பேருந்து  நிலையம் அமைக்கப்பட்டிருந்தது எனவும் அப் பேருந்து  நிலையத்திலேயே சி.சி.ரி. கமராக்களை பொருத்தியிருந்ததாகவும் பொலிஸார் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த சி.சி.ரி கமராக்களை அகற்றியதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .