2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்தவருக்கு தண்டம்

George   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்தவருக்கு அதிகூடிய தண்டமாக 3 இலட்சம் ரூபாய், கிளிநொச்சி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தனர்.

அத்துடன், தண்டப்பணத்தினை செலுத்ததவறினால் 12 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி நபரை கடந்த வியாழக்கிழமை(02) கைது செய்யும் போது, 20 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் உபரகணங்கள் என்பனவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் சனிக்கிழமை (04) ஆஜர்ப்படுத்தப்படுத்திய போது, 3 இலட்சம் ரூபாய்,  தண்டம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .