2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'தெளிகருவி இயக்குபவர்களால் மலேரியா அழிக்கப்பட்டுள்ளது'

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- யோ.வித்தியா


தெளிகருவி இயக்குபவர்களின் சேவையால் மலேரியா அற்ற இலங்கையை இன்று காணமுடிகிறது என பூச்சியியல் பிரிவின் யாழ்.மாவட்ட ஆலோசகர் எஸ்.சிவமோகன் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.

வடமாகாண தெளிகருவி இயக்குபவர்கள் சங்க தலைமை செயலக பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுகிழமை (05) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

'எந்தவித பாகுபாடின்றி தெளிகருவி ஊழியர்கள் செயற்பட்டு வருகிறார்கள். அவர் இந்த வேலைகளை செய்யும் போது கிருமித்தொற்று, கண் பாதிப்பு, மருந்து ஒத்துக்கொள்ளாத தன்மை என்பவற்றோடு பலபாதிப்புக்களையும் எதிர்கொள்கிறார்கள்.

இவர்களது சேவைகள் உயர்ந்தது. தமது உடல் நலன்களையும் கவனிக்காது செயற்பட்டு வருகிறார்கள்.

கல்வி அறிவை காட்டிலும் வயதுக்கு அனுபவமுண்டு. எனவே முதியவர்களிடம் நிறைய விடயங்களை பெற்றுக்கொள்ளலாம். தாழ்வு மனப்பாங்குடன்  வேலை செய்யக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என அவத் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், தெளிகருவி பணியாளர்களுக்கான மோட்டார் வண்டி பெறுதல் சம்மந்தமாகவும் நிரந்தர நியமனம், பிரயாணப்படியை அதிகரித்தல், என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்த ஊழியர்களுக்கு 3 மாதத்துக்கு  ஒரு தடவை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னர் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருந்தும் அந்நடவடிக்கை காலப்போக்கில் கைவிடப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .