2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தொழில் நிறுவனங்களுடனான கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


தொழில் நிறுவனங்களின் சமூக தொடர்பாடலையும் கூட்டுறவையும் விருத்தி செய்வதற்கான கலந்துரையாடல், வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் தொழிற்துறை திணைக்கள அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (07) இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன்  கூறியதாவது,

தொழில்தருநர்கள் மற்றும் தொழிலாளர்களை இணைத்து ஒரு நிறுவனத்தில் முரண்பாடுகள் அற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு எவ்வாறு சமூக தொடர்பாடல், கூட்டுறவு பயன்படும் என்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

யாழ். நகர பகுதியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டமைந்த முக்கியமான நிறுவனங்களின் முதலாளிகளையும் தொழிலாளர்களையும் இந்த கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தோம்.

சமூக பங்காளர்களிடையே தொடர்பாடல் கருத்துக்களுக்கு செவிமடுத்தல், ஒன்றுபட்ட தீர்மானங்களை எடுத்தல், கைத்தொழிலில் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுதல் போன்ற விரிவுரைகளை இதன்போது வழங்கியிருந்தோம்.

இக்கருத்தரங்கின் முக்கியமான நோக்கம், ஒரு நிறுவனத்திலுள்ள இரண்டு தரப்பினரையும் சுமூகமான அமைதியான நிலைக்கு கொண்டுவந்து கைத்தொழிலில் அமைதியான நிலைமை எற்படுத்துவது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .