2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மொழியுரிமை தொடர்பிலான செயலமர்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். கிளையின் ஏற்பாட்டில், இலங்கையின் மொழியுரிமை தொடர்பிலான செயலமர்வு யாழ். கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (08) இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் கொழும்பு சட்டக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் நாகநாதன் செல்வகுமாரன் விரிவுரைகளை வழங்கினார்.

அவர் கருத்துரை வழங்குகையில்,

தமிழ் மொழி அரசியலமைப்பில் அங்கிகாரம் பெற்றிருந்தும் கூட நடைமுறையில் அது கைக்கொள்ளப்படவில்லை. தேசிய கல்வி கொள்கையிலும் திணைக்களங்களில் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் பட்சத்தில் மாத்திரமே இதில் மாற்றம் வரும்.

விரும்பிய மொழியில் செயல்படுவதற்கு நாட்டு பிரஜைக்கு உரிமை இருக்க வேண்டும். அரச கரும மொழி ஆணைக்குழுவின் இணையத்திலுள்ள சட்டம் தொடர்பான விடயம் தமிழில் காணப்படவில்லை.

பரீட்சை முறையில் சிங்களமும் தமிழ் மொழியும் ஒரே நேரத்திலே பரீட்சைகள் இடம்பெறுகின்றன.

இதன் அர்த்தம் என்னவெனில் சிங்களம் அல்லது தமிழ் இரண்டில் ஒன்றை மட்டும் கற்றுக்கொள் என்று அர்த்தப்படுகின்றது. இத்தகைய கல்வி முறை மாற்றம் ஏற்பட்டாலே மொழி நல்லிணக்கம் ஏற்படுகின்றது.

பொலிஸில், மூன்று மொழிகளும் தெரிந்த ஒருவரே இரண்டாம் கட்டங்களிலிருந்து பதவியுயர்வுகளை பெறமுடியும்.

ஆனால், இங்கு தமிழ் தெரியாத பல பொலிஸார் பதவியுயர்வுகளை பெற்றுக்கொள்கின்றனர். அது அரசியலமைப்பு எவ்வாறு சாத்தியமாகின்றது என்பது தெரியவில்லை என அவர் மேலும் கூறினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .