2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, எம்.றொசாந்த்


வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியை சேர்ந்த இழுவை படகுகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (9) போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான அமர்வு வியாழக்கிழமை (9) வடமாகாண சபையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீண்டும் இழுவை படகு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி மீனவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி பகுதியில் 23 பேர் இழுவை படகு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இழுவை படகு மீன்பிடியால் கடல்வளம் முற்றாக அழிக்கப்படுவதை கருத்திற்கொண்டு இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு இழுவை படகு மீன்பிடிக்கு தடை விதித்திருந்து.

அந்த அடிப்படையில், மேற்படி 23 மீனவர்களும் இழுவை படகு மீன்பிடியில் ஈடுபட வடமாகாண மீன்பிடி அமைச்சு தடை விதித்திருந்தது.

தமது மீன்பிடி முறைமைக்கு தடை விதிக்கப்பட்டமையால் தங்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இம்  மீனவர்கள் கடந்த 6 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, வியாழக்கிழமை (09) வடமாகாண சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .