2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருட்டுடன் தொடர்புடைய நபர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பண்டத்தரிப்பு, காளையடி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயது சந்தேகநபர் ஒருவரை புதன்கிழமை (08) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் வியாழக்கிழமை (09) கூறினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி வீட்டிலிருந்து கணினி, அலைபேசிகள், ஐ போட், மற்றும் 18 ஆயிரம் ரூபா பணம் உள்ளடங்கலாக 5 இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் திருட்டுப்போயிருந்தன.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளர், இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தமைக்கமைய, விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வீட்டில் காணப்பட்ட கைரேகை அடையாளங்களை சேகரித்து பகுப்பாய்விற்கு அனுப்பியிருந்தனர்.

ஏற்கனவே திருட்டு சம்பவங்களுடன் பிடிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபருடைய கைரேகை, வீட்டிலிருந்து பெறப்பட்ட கைரேகைகளுடன் ஒத்துப்போயிருந்தது.

இதனையடுத்து, பொலிஸார் கைரேகை ஒத்துப்போயிருந்த 19 வயது சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .