2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி வருகையில் தமிழ் பொலிஸ் இல்லை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, எம்.றொசாந்த்

ஜனாதிபதியில் வடக்கு விஜயத்தின் போது தமிழ் பொலிஸார் எவரும் கடமைக்கு அழைக்கப்படவில்லையென வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் வியாழக்கிழமை (09) இடம்பெற்று வருகின்றது. இதன்போதே டெனீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். அந்நிகழ்வுகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தமிழ் பொலிஸார் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பில் சில தமிழ் பொலிஸார் தங்கள் ஆதங்கங்களை என்னிடம் கூறியிருந்தனர். ஏன் இவ்வாறானதொரு புறக்கணிப்பு இடம்பெற்றது என்பது தொடர்பில் தெரியவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .