2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாயை தாக்கிய மகன் விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கரணவாய் மேற்கு பகுதியில் வசிக்கும் மூதாட்டியான பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவருடைய மகனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (09) உத்தரவிட்டார்.

மூதாட்டியான பெண்ணை அவரது 35 வயதுடைய மகன் கடந்த செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அத்துடன், தாயின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் சேதமாக்கியிருந்தார்.

இது தொடர்பில் தாய், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட வேளை, மேற்படி சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் சந்தேகநபர் நெல்லியடி நகர பகுதியில் வைத்து புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டு, தொடர்ந்து வியாழக்கிழமை (09) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .