2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அலைபேசி திருடர்கள் கைது

Gavitha   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

துவிச்சக்கரவண்டியொன்றில், அலைபேசியில் உரையாடிக்கொண்டு சென்ற ஒருவரின் அலைபேசியை அபகரித்த நால்வரை ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்ததாக, தெல்லிப்பளை பொலிஸார் திங்கட்கிழமை (13) தெரிவித்தனர்.

காங்கேசன்துறை வீதியால் துவிச்சக்கரவண்டியொன்றில் அலைபேசியில் உரையாடிக்கொண்டு சென்றவரின் அலைபேசியை, சனிக்கிழமை (11) இரவு முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் பறித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள், முச்சக்கரவண்டியின் இலக்கத்தகட்டு இலக்கத்தை குறித்தெடுத்து பொலிஸாரிடம் கொடுத்துள்ளனர்.

அவ்விலக்கத்தை வைத்து ஏழாலை பகுதியை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .