2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிராமிய சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


யாழ். அராலி வீதி ஜே - 87 கிராம அலுவலர் பிரிவு, சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் தொடர்பான விசேட கூட்டம் கரங்கள் சனசமூக நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எம்.வீரவர்த்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதேசத்தில் களவு, போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

மேலும், மதுபோதையில் இரவு நேரத்தில் அட்டகாசம் புரிபவர்கள் மீது புகார்கள் அளிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் என பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், இக்கிராமத்தில் பழைய பொருட்கள் கொள்வனவு, விற்பனை கடைகள் அதிகம் இருப்பதால், கோவில்களில் இருந்து திருடப்பட்ட பித்தளை பொருட்களை விற்பனை செய்யவோரிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்யவேண்டாம் எனவும் அவர்களை பற்றிய தகவலை தரவேண்டும் எனவும் பொறுப்பதிகாரி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .