2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வேலணை, நெடுந்தீவு பிரதேச செயலகங்களின் கட்டடங்கள் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


வேலணை, நெடுந்தீவு பிரதேச செயலகங்களின் புதிய கட்டிடத்தொகுதிகளை, இன்று செவ்வாய்க்கிழமை (14), ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

இன்று காலையில் நயினாதீவுக்கு சென்ற ஜனாதிபதி நாகவிகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச செயலக கட்டிடம் மற்றும் நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மகிந்தோதய ஆய்வுகூடத்தையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வேலணைக்கு சென்று வேலணை பிரதேச செயலகம் கட்டிடம் மற்றும் மின்சார சபையின் பாவனையாளர் அலுவலகத்தையும் பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலக கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

நெடுந்தீவு பிரதேச செயலகம் 78 மில்லியன் ரூபாய் செலவிலும் வேலணை பிரதேச செயலகம் 50 மில்லியன் ரூபாய் செலவிலும், கெயார் நிறுவனத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டன. 

தொடர்ந்து, ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி, காரைநகர் தியாகராஜா மகா வித்தியாலயம் மற்றும் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடங்களையும் திறந்து வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .