2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சூது விளையாடுவதற்காக திருடியவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


இளவாலையிலுள்ள வீடுகளில் பெறுமதியுடைய பொருட்களை திருடி அதனை சூது விளையாட்டில் ஈடுபடுத்தி வந்த ஏழு பேரை செவ்வாய்க்கிழமை (14) கைது செய்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 32 பவுண் நகை, 6 கணினிகள், 2 தொலைக்காட்சி பெட்டிகள், 4 வானொலிகள், 1 ஐபாட் மற்றும் இரண்டு டிஜிட்டல் கமராக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) 19 வயது சந்தேகநபர் ஒருவரை கைது செய்து விசாரணை செய்த போது, அந்த சந்தேகநபர் குழுவாக சேர்ந்து தாங்கள் திருட்டில் ஈடுபட்டு திருடிய பொருட்களை சூது விளையாட்டிற்கு பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சூதுக்காக திருட்டில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களுடன் சூது விளையாட்டில் பங்குபற்றிய 20 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .