2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தை அடைந்தது முதல் தபால் ரயில்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


24 வருடங்களுக்கு பின்னர் முதலாவது தபால் ரயில் இன்று புதன்கிழமை (15) காலை 7.25 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

முதலாவது தபால் ரயிலை வரவேற்கும் விதத்தில் வரவேற்பு நிகழ்வு மற்றும் தபால் ஊர்வலம் என்பவற்றை யாழ்.பிரதம தபால் நிலையத்தினர் நடத்தியிருந்தனர்.

கொழும்பிலிருந்து தபால் ரயிலில் வந்த தபால் பொதிகளை பொறுப்பேற்ற இலங்கை தபால்மா அதிபர் ரோஹண அபேவர்த்தன, அவற்றை தபால் பொதி சுமப்பவரிடம் கையளித்தார்.

இதனையடுத்து, பாரம்பரிய தபால் காவும் முறையான, வண்டிலில் தபால் கொண்டு செல்லும் முறையில் தபால் பொதி சுமப்பவர் யாழ்.புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகளை யாழ்.பிரதம தபால் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

இனிவரும் காலங்களில் பாரம்பரிய முறையன்றி, வாகனத்திலேயே தபால் நிலையம் வரை தபால்கள் கொண்டுசெல்லப்படும் என தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்தார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .