2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாணவன் கொலை; இருவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் வைத்து யாழ்.இந்து கல்லூரி மாணவன் சண்முகநாதன் யதுசன் (வயது 20) கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன் புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.

மேற்படி மாணவனின் வீட்டிற்குள் கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நுழைந்த ஆயுததாரிகள் மாணவனையும், தந்தை, தாயையும் கோடாரியால் கொத்தியதுடன், வீட்டிலிருந்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

இதில் மாணவன் உயிரிழந்ததுடன், தந்தை, தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சுகமடைந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பிலான விசாரணைகளை முதலில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வந்ததுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு விசேட பொலிஸ் குழு மேற்கொண்டது.

இதன்போது, மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் இனங்காணப்பட்டு, பொலிஸார் அவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்கள் தப்பி சென்று வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சந்தேகநபர்களில் இருவர் சுழிபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளையில் அவர்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (14) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 27 மற்றும் 32 வயதுடைய சகோதரர்கள் ஆவார்கள். மிகுதி மூவரையும் கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .