2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முழுமையான இராணுவ ஆளுகைக்குள் இருக்கின்றோம்: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


தமிழ் மக்கள் எல்லா விதத்திலும் நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவ ஆளுகைக்குள் இருந்து உலக உணவு தினத்தை கொண்டாட வேண்டியுள்ளது என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.

உலக உணவு ஸ்தாபனத்தின் ஏற்பாட்டிலான உலக உணவு தின நிகழ்வுகள் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எல்லா வகையிலும் தமிழ் மக்கள் இராணுவத்தின் ஆளுகைக்குள் இருக்கின்றனர் என்பதை உலக உணவு ஸ்தாபன அலுவலர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

உற்பத்தி செய்யப்படும் உணவில் சரியான பங்கீடுகள் மேற்கொள்ளப்படாமையாலேயே பட்டினிச்சாவு ஏற்படுகின்றது. ஒரு பக்கத்தில் அதிகப்படியான உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளிடம் வைப்பகங்களில் நகைகளை அடகு வைத்தவர்களின் விபரங்களை இராணுவத்தினர் சேகரிக்கின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் விபரங்களை உண்மையுள்ள அரசாங்கம் என்றால் அதனை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வைத்து கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 விவசாய அமைப்புக்களுக்கு கச்சான் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், உலக உணவு தினத்தை நினைவுபடுத்தும் கண்காட்சி நிகழ்வொன்றும் இதன்போது இடம்பெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .