2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி வருகையின்போது ஆசிரியர்களிடம் பணம் வாங்கியது கண்டிக்கத்தக்கது: ஸ்டாலின்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகைக்காக செலவு செய்த மேலதிக பணத்தை நெடுந்தீவிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களிடம் அந்த பாடசாலையின் அதிபர் கேட்டிருந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஆசியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மேற்படி பாடசாலைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார். அந்த நிகழ்விற்காக செலவு செய்த பணத்தொகையை அந்த கல்லூரியின் ஆசிரியர்கள் தரவேண்டும் என கல்லூரி அதிபர் கேட்டுள்ளார்.

மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கிய பணத்தை இவ்வாறு நிகழ்வுகளுக்கு செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பணத்தினை ஆசிரியர்கள் கொடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளேன்.

இது தொடர்பான முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொண்டிருந்தோம். நேற்று வியாழக்கிழமை (16) அநுராதபுரத்தில் அதே கோரிக்கைகளுடன் போராட்டமொன்றையும் மேற்கொண்டோம். 

அதுபோல எதிர்வரும் 29ஆம் திகதி காலியிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். 9 மாகாணங்களிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி நெடுந்தீவுக்கு சென்றபோது அங்குள்ள குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.

ஜனாதிபதி வருகைக்கான அபிவிருத்தி வேலைகளுக்காக 2 இலட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு அந்த நிதியை கல்வி வலயம் வழங்கியிருந்தது.

இருந்த போதிலும் இப்பாடசாலையில் இந்த நிதிக்கு மேலதிகமாக ஒரு லட்சத்து 8000 ரூபாய் செலவு செய்யப்பட்டது. இந்த தொகையை ஆசிரியர்கள் வழங்கவேண்டும் என குறித்த பாடசாலை அதிபர் வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .