2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சிற்றூர்தியில் திருடிய பெண்கள் மூவர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் சென்றுகொண்டிருந்த தனியார் சிற்றூர்தியில் பயணித்த பயணியொருவரின் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய கொழும்பைச் சேர்ந்த 3 பெண்கள், சனிக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) கூறினர்.

மேற்படி மூன்று பெண்களும் சிற்றூர்தியில் ஏறி சாவகச்சேரி வரை பயணிப்பதற்கான பற்றுச்சீட்டை பெற்றுள்ளனர்.

எனினும், சிற்றூர்தி சாவகச்சேரியை கடந்து மீசாலை சென்ற போதும், மூன்று பெண்களும் இறங்காதிருந்தமையை அவதானித்த நடத்துனர், பெண்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்களை விசாரித்த போது, பெண்கள் மூவரும் முன்னுக்கு பின்னாக கதை கூறினார்.

இதனையடுத்து, பயணிகள் தங்கள் உடமைகளை சோதனை செய்யும்படி நடத்துனர் கூறினார். இதன்போது, பயணியொருவர் தனது பையிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லையென கூறினார்.

இதனையடுத்து, அங்கு சாவகச்சேரி பொலிஸார் அழைக்கப்பட்டு, மூன்று பெண்களும் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது காணாமற்போன 15 ஆயிரம் ரூபாய் பணமும், மூன்று பெண்களும் 15 ஆயிரம் ரூபா பணத்தை திருடியமை தெரியவந்தது.

இதனையடுத்து, மூன்று பெண்களையும் கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .