2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தீயில் விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியிலுள்ள வீடொன்றின் அடுப்புக்குள் வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தையொன்று, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (21) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த ஜீவாகரன் மேகித்தியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உருத்திரபுரத்திலிருந்து காங்கேசன்துறை வீதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் சென்றிருந்த அக்குழந்தை, கடந்த 13ஆம் திகதி அவ்வீட்டிலுள்ள அடுப்புக்குள் தவறி வீழ்ந்துள்ளது.

நீண்ட நேரமாக அடுப்புக்குள் குழந்தை இருந்தமையால் குழந்தையின் பின்பகுதி கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது.

இதனையடுத்து, குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்தும், குழந்தை சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (21) உயிரிழந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .