2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வெள்ளத்தில் பாதிப்படைந்தோருக்கு நிவாரணம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக  பெய்த மழையால்  வெள்ளப் பாதிப்புக்குள்ளான நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 316 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை, நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச செயலாளர் தெய்வேந்திரன் சுகுணவதி தெரிவித்தார்.

நாவாந்துறைப் பகுதியில் 03 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 02 இலட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாய் நிதியுதவியில் அரிசி, மா, சீனி மற்றும் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

அங்கத்தவர் ஒருவரைக் கொண்ட குடும்பங்களுக்கு 385 ரூபாய் பெறுமதியிலும்; 02 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு  490 ரூபாய் பெறுமதியிலும் 03 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 595 ரூபாய் பெறுமதியிலும் 04 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 700 ரூபாய் பெறுமதியிலும்; 05 மற்றும் அதற்;கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்;கு 805 ரூபாய் பெறுமதியிலும் உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

அப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .