2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சுழற்சி முறை கடன் திட்டம்

George   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட பேருந்து உரிமையாளர்களின் தூர சேவை சங்க அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறையில் கடன் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் சிவராசா சிவபரன், புதன்கிழமை(22) தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
 
எமது சங்கத்தில் 42 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டு தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன. எமது சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றவர்களுக்கு இந்த சுழற்சி முறையிலான கடன்கள் வழங்கப்படுகின்றன.
 
அதாவது, ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் 3 மாதங்களுக்கு ஒரு தடவை குலுக்கல் முறையில் வழங்கப்படவுள்ளது. ஒரு தடவை குலுக்களில் 5 பேருக்கு கடன்கள் வழங்கப்படும். இதன் முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை(21) ஐந்து பேருக்கு கடனகள்; வழங்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறு வழங்கப்படும் கடன்கள் ஐந்து மாத தவணைகளில் மீளச்செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், அதற்கு எவ்வித வட்டிகளும் அறவிடப்பட்டமாட்டாது.
 
அத்துடன், சங்கத்திலுள்ள பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் அடையாள அட்டை என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.
 
பேருந்துகளின் சாரதிகள் நடத்துனருக்கான சீருடைகள், அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .