2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தனிமையிலிருந்த மூதாட்டி படுகொலை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், இளவாலை, பத்தாவத்தை பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டியொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று இளவாலை பொலிஸார் கூறினர்.

இராஜேஸ்வரன் ராஜராஜேஸ்வரி (வயது 75) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி மூதாட்டி கணவன், பிள்ளைகள் இல்லாத நிலையில் தனிமையில் வசித்து வந்துள்ள நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி மூதாட்டியின் உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்றவேளை, வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எறிந்துவிடப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அம்மூதாட்டி, வீட்டில் இருக்கவில்லை என்றும் அந்த உறவினர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மூதாட்டியை அவரது வீட்டுக்கு அருகிலெல்லாம் தேடியதாகவும் இறுதியில் அவர், வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன் அவரது  உடலைச் சுற்றி மிளகாய்த் தூள் கொட்டப்பட்டிருந்ததாகவும் இதனையடுத்தே தான் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் உறவினர் கூறியுள்ளார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவாவுடன் அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார், நீதவானின் உத்தரவுக்கமைய சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைத்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .