2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தீபாளியில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பகுதியில் தீபாவளி தினத்தன்று மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுள டி.சில்வா வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

சந்தேகநபரிடமிருந்து 175 மில்லிமீற்றர் மதுபான போத்தல்கள் 90, 750 மில்லிமீற்றர் மதுபான போத்தல்கள் 6 கைப்பற்றப்பட்டன.

தீபாவளி தினத்தில் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் மேற்படி சந்கேதநபர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தோட்ட வெளியில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்துகொண்டிருந்தார்.

தகவலறிந்து அவ்விடத்திற்கு சென்று சந்தேகநபரை கைது செய்ததாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மிருசுவில், பழையவாய்க்கால் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கசிப்பு போத்தல்கள் புதன்கிழமை (22) மீட்டதாக கொடிகாமம் குற்றத்தடுப்பு பொலிஸார் வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

இருந்தும், இதனை மறைத்து வைத்திருந்த 3 சந்தேகநபர்கள் தப்பித்து சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .