2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் மரக்கறி விதைகளுக்கு தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ் மாவட்டத்தில் மரக்கறி விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் ரி.ரவிமயூரன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார்.

கத்தரி, தக்காளி, பயிற்றை, புடோல், பாகல் மற்றும் பூசணி போன்ற மரக்கறி வகைகளின் விதைகளுக்கே தட்டுப்பாடு நிலவுகின்றது. 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்கத்தால் விதை உற்பத்திக்கான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விதைகள் கமநல சேவைகள் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. யாழ் மாவட்டத்திலுள்ள 15 கமநலசேவை நிலையங்களில் 12 கமநல சேவை நிலயங்கள் ஊடாக இந்த விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காலபோகத்திற்கு ஏற்ப இந்த விதைகள் விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற போதும் அவை போதுமானதாக இல்லை.

இதனால் தற்போது பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து மரக்கறி விதைகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறு பெறப்படும் விதைகளையும், யாழ்மாவட்ட விதை உற்பத்தி கூட்டுறவு சங்கத்தால் உற்பத்தி செய்யப்படும் விதைகளையும் ஒன்று சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .