2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம் உதவி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவக்குழு உள்ளடங்கலாக 10 பேர் கொண்ட உதவிக்குழு  வெள்ளிக்கிழமை (31) பதுளை பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக சிவன் மானுட மேம்பாட்டு நிறுவன தலைவர் இ.கலியுகவரதன் வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 10 பேர் கொண்ட உதவிக்குழு வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர்.

உடனடி நிவாரணம் வழங்க விரும்புபவர்கள் கொக்குவில் கல்லூரி வீதியில் அமைந்துள்ள சைவ மகாசபை, மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள சிவ சற்குருநாதர் ஆச்சிரமம், திருகோணமலையில் அமைந்துள்ள சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனம், அம்பாறை தம்பிலுவில் உள்ள சைவநெறி கூடம் மற்றும் சுழிபுரம் இவான் வீதியில் இருக்கும் சிவத்தமிழ் மானிட விடியற்கழகத்திலும் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம்.

உதவிகள் வழங்குபவர்கள் 0777740958, 0770711152 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ளும்படி அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .