2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் மாணவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 03 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா, நா.நவரத்தினராசா

யாழ். வட்டுக்கோட்டை மாவடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல்  மோட்டார் சைக்கிளொன்று மதிலுடன் மோதியதால்,  மாணவனான  எஸ்.சுகராஜ் (வயது 16) உயிரிழந்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.

தலைக்கவசத்தை மோட்டார் சைக்கிளின் கைபிடியில் கொழுவியவாறு பயணித்த இந்த மாணவன், சந்தியில் திரும்பும்போது தலைக்கவசமானது கைபிடிக்கும் எரிபொருள் தாங்கிக்கும் இடையில் சிக்கிக்கொண்டது. இந்த நிலையில், மோட்டார் சைக்கிள் எதிரே இருந்த மதிலுடன் மோதியது.

இதில்  படுகாயமடைந்த இந்த  மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்தான். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .