2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நூல்கள் பகிர்ந்தளிப்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 03 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய தூதரகத்தால் வடமாகாணத்திலுள்ள நூலகங்களுக்காக வழங்கப்பட்ட 1700 நூல்களும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வடமாகாணத்துக்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலுள்ள பொது நூலகங்களின் பொறுப்பாளர்களிடம் இன்று திங்கட்கிழமை (03) பகிர்ந்தளிக்கப்பட்டன.

யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்து இந்த நூல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சமயம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், மனையியல், பிரசித்தமான ஆங்கில நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பு புத்தகங்கள் என 269 தலைப்புக்களை உடைய 1700 புத்தகங்கள், கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி யாழ். இந்திய துணைத்தூதரகத்தால் வடமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

அந்த புத்தகங்களே இன்று நூலகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், யாழ்.இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .