2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சி.வி, சி.வி.கே.வுக்கு மொட்டைக்கடிதம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 05 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அவைத் தலைவர் சி.வி.சிவஞானத்துக்கும் அண்மைக்காலமாக மொட்டைக் கடிதங்கள் கிடைக்கப்பெறுவதாக சிவஞானம் இன்று புதன்கிழமை (05) தெரிவித்தார்.

வடமாகாண சபையின் செயற்பாடுகளை விமர்சித்தும் முதலமைச்சர் மற்றும் தன்னை குறைகூறியும் இந்த மொட்டை கடிதங்கள் அனுப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மொட்டைக் கடிதங்களை அனுப்புபவர்கள், நேரடியாக எங்களிடம் வந்து வினாவினால் அல்லது பெயர் விலாசங்களுடன் கடிதங்களை அனுப்பினால் அதற்கு தகுந்த பதிலளிக்க தயாராக இருக்கின்றோம்.

மாறாக மொட்டைக் கடிதங்களுக்கெல்லாம் எங்களால் பதில் கூற முடியாது என சி.வி.சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .