2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் வெடிபொருட்கள் மீட்பு

A.P.Mathan   / 2014 நவம்பர் 07 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான், செல்வநாயகம் கபிலன்
 
யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியிலுள்ள வயல் காணியிலிருந்து வெடிபொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைக்குண்டுகள் 4 மற்றும் 81 மில்லிமீற்றர் ஷெல் 2 என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
 
அப்பகுதியால் மீன்பிடி தொழிலுக்கு சென்றவர்கள் வெடிபொருட்கள் இருப்பது கண்ணுற்கு 119 க்கு அழைப்பை மேற்கொண்டுள்ளனர்.
 
இதனையடுத்து, இராணுவத்தினருடன் சென்று வெடிபொருட்களை மீட்டு அவ்விடத்தில் வைத்தே அவற்றை செயலிழக்க வைத்ததாக சாவகச்சேரி பொலிஸார் மேலும் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .