2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குடும்பங்களை முன்னேற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பெண் தலைமைத்துவ, மாற்றுவலுவுள்ளோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பான செயலமர்வு வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் திங்கட்கிழமை (10) தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.

சமூக தொழில், தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில், வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மாவட்ட ரீதியிலான பிரதி பணிப்பாளர்கள், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகஸ்தர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சோதியா பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், வளவாளராக சமூக தொழில், தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் கீர்த்தி சிறிதபோ தர்மப்பிரிய கலந்துகொண்டார்.

சமூகத்தில் பின்னடைவிலுள்ள மேற்படி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது எவ்வாறு என்பது தொடர்பிலும் அதற்காக எவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், பெண் தலைமைத்துவ, மாற்றுவலுவுள்ளோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமூக சேவைகள் அமைச்சின் திட்டங்கள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றன என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.

மேலும், மேற்படி குடும்பங்களுக்கு உதவிகள் புரிவதற்கு முன்வரும் நிறுவனங்கள், எவ்வாறான உதவிகளை அளிப்பதன் மூலம் அக்குடும்பங்களின் நீண்டகால நலன்களை பேண முடியும் எனவும் அக்கறை செலுத்தப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .