2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஏழாலையில் பொலிஸ் ரோந்து

Menaka Mookandi   / 2014 நவம்பர் 12 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேரங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டி.எல்.துஷ்மந்த இன்று புதன்கிழமை (12) தெரிவித்தார்.

ஏழாலை பகுதியில் அண்மைக் காலமாக திருட்டுச் சம்பவங்கள், கைகலப்புக்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால், அப்பகுதியில் தற்காலிக பொலிஸ் கண்காணிப்பு நிலையத்தை அமைத்து குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆவன செய்யுமாறு அப்பகுதி சிவில் பாதுகாப்பு குழுக்கள் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏழாலை பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்தமையடுத்து பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால், சில வாரங்களாக குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன என்று அவர் இதன்போது கூறினார்.

மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கைகளும் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .