2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வை கட்டுப்படுத்த விசேட குழு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 12 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கொடிகாமம் கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு  விசேட சிவில் பாதுகாப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஷிந்திக என்.பண்டார புதன்கிழமை (12) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக பொலிஸாரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கடந்த வார இறுதி நாட்களில் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் அகழும் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

மேற்படி பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளால் அப்பகுதியில் கடல்நீர் உட்புகும் அபாயம் காணப்படுகின்றது. இதனால்,  எதிர்காலத்தில் நிலப்பரப்பு குறைவடையும் அபாயமும் உள்ளது.  அத்துடன், இவ்வாறு கடல்நீர் நிலப்பரப்பினுள் நுழைவதால் அப்பகுதியிலுள்ள நன்னீர்  கிணறுகள் உவர் நீராக மாற்றமடையும்.  ஆகவே, சட்டவிரோத மணல் அகழ்வோர் இதனை கருத்திற்கொண்டு மணல் அகழ்வு நடவடிக்கைகளை கைவிடவேண்டும்.

அப்பகுதியிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களை கொண்டு சட்டவிரோத மணல் அகழ்வை கண்காணிக்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு அப்பகுதி கிராம அலுவலர் தலைவராக இருப்பார்.  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் இக்குழு, உடனடியாக அந்த விடயத்தை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரும்.  மணல் அகழ்பவரை கைதுசெய்யும் மற்றும் மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் எனவும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .