2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சி.வி.யை அறிந்தவர்கள் இருவரே; இந்திய துணைத் தூதுவர்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 12 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணவர்களுக்கு தங்கள் பாடத்திட்ட கல்வியுடன் பொது அறிவு மிகவும் அவசியமாகவுள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் மூர்த்தி கூறுகையில்,

நீர்வேலியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு இன்று புதன்கிழமை (12) விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். அவ்வேளையில் அங்கிருந்த 150இற்கும் மேற்பட்ட மாணவர்களின் பொது அறிவை சோதித்து பார்க்கும் பொருட்டு, வடமாகாண முதலமைச்சர் யார் என கேள்வி கேட்டேன்.

அதற்கு அங்கிருந்த மாணவர்களில் இருவர் மட்டுமே சி.வி.விக்னேஸ்வரன் என பதில் கூறினார்கள். வேறு எவரும் முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் அறிந்திருக்கவில்லை. பொது அறிவு விடயங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும்படி அப்பாடசாலை ஆசிரியர்களுக்கு எடுத்துக்கூறினேன்.

மாணவர்கள் பாடக்கல்வியை எவ்வளது தூரத்திற்கு கற்கின்றார்களோ அந்தளவுக்கு பொது அறிவும் இருக்க வேண்டும். பொது அறிவு மாணவர்களுக்கு அவசியமானதொன்று. மாணவர்களின் பல்தரப்பட்ட அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கு நூல்களை அன்பளிப்பு செய்து வருவதாகவும் மூர்த்தி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .