2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கசிப்பு விற்றவருக்கு அபராதம்

A.P.Mathan   / 2014 நவம்பர் 12 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
யாழ். பண்டத்தரிப்பு கிரான்பற்று பகுதியில் கசிப்பு விற்பனை செய்த நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், இன்று புதன்கிழமை (12) தீர்ப்பளித்தார்.
 
மேற்படி நபர் கசிப்பு விற்பனை செய்துகொண்டிருக்கும் போது இளவாலை பொலிஸாரால் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
 
கைதுசெய்யப்படும் போது 38 லீற்றர் கசிப்பையும் பொலிஸார் மீட்டனர்.
 
தொடர்ந்து, கசிப்பு விற்ற நபர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அந்நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
 
இதனையடுத்து. நீதவான் தண்டம் விதித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .