2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'தடுப்பு முகாமில் உள்ளவர் விடுவிக்கப்படவில்லை'

Menaka Mookandi   / 2014 நவம்பர் 14 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

25 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாக அறியப்பட்ட கே.வைரவநாதன், இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை என வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் இன்று வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் மத்தி தேவாலய வீதியை சேர்;ந்த கே.வைரவநாதன் (தற்போது வயது 53) ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாக அவரது உறவினர்களுக்கு அம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை (11) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் வைரவநாதன் உயிருடன் இருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது, தவிர அவர் விடுதலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. இதனால், அவரது உறவினர்கள் நீதிமன்றத்திற்கு சென்று அவரை பிணையில் வெளியில் எடுக்க மட்டுமே முடியும்.

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள கடையொன்றில் இவர் பணியாற்றிய வேளையில், 1990 ஆம் ஆண்டு கொழும்பில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து வைரவநாதனும் காணாமற்போயிருந்தார்.

இதன் பிறகு இவரது பெற்றோர்கள் இவரை பல இடங்களில் தேடியும் வைரவநாதன் தொடர்பான எந்த தகவலும் இல்லை. காலப்போக்கில் இவரது பெற்றோர்களும் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர், வைரவநாதனின் மாமனார் ஒருவர் வைரநாதனை தேடும் பணியில் ஈடுபட்டார். இதன்போது வைரவநாதன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.

இருந்தும், தேடிய மாமனார் மாரடைப்பால் இறந்ததால் வைரவநாதனை தேடும் பணியை அவரது உறவினர்கள் கைவிட்டனர். இந்நிலையிலேயே தற்போது வைரவநாதன் உயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளதாக சுகிர்தன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .