2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பழையதை மாற்றியவர் கைது

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக திருட்டுக்களில் ஈடுபட்ட கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சின்னமணி ஜெகன் (வயது 29) என்பவரை வெள்ளிக்கிழமை (14) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார், சனிக்கிழமை(15) தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 5 அலைபேசிகள் மற்றும் 4 துவிச்சக்கர வண்டிகளையம் மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர், சுன்னாகம் சந்தைக்கு பழைய துவிச்சக்கர வண்டிகளில் வந்து அதனை புதிய துவிச்சக்கர வண்டிகளுக்கு அருகில் தரித்து விட்டு, புதிய துவிச்சக்கர வண்டிகளை திருடி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .