2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காலிக இல்லம்

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் இல்லம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், சனிக்கிழமை (15) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்முறையால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளான பல பெண்கள், யாழ். மாவட்டத்தில் அதிகளவு காணப்படுகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து வளமான வாழ்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் இந்த இல்லம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் நிதி உதவியுடன் 17 மில்லியன் ரூபாய் செலவில் இந்த இல்லம் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் இதற்கான கட்டுமான பணிகள் பூர்த்தி அடையும் என அவர் மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .