2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பசுவுடன் சென்ற நால்வருக்கு அபராதம்

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பசுமாட்டினை கொண்டு சென்ற உடுப்பிட்டி பகுதியினை சேர்ந்த நால்வருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஜோய் மகிழ்மகாதேவன்இ வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி மேற்படி நால்வரும்  இணுவில் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் சிறிய உழவு இயந்திரம் ஒன்றில் பசுமாட்டினை உடுப்பிட்டி பகுதிக்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதன் போது வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த அச்சுவேலி பொலிஸார் நால்வரையும் கைது செய்திருந்ததுடன் அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதுஇ குற்றவாளிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கு அமைய நீதவான் மேற்படி அபராத தொகையினை செலுத்துமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .