2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கசிப்பு வடித்த பெண் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 16 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், துன்னாலை, கோட்டப்பளை பகுதியில் கசிப்பு வடித்த 26 வயதுடைய பெண் சந்தேகநபர் ஒருவரை சனிக்கிழமை (15) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித்.சி.பெரேரா ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் வீட்டுக்கு விசாரணைக்காகச் சென்ற பொலிஸார், அப்பெண் கசிப்பு வடிப்பதைக் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், இரண்டு போத்தல் கசிப்பு, 10 லீற்றர் சோடா மற்றும் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .