2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபை உறுப்பினருக்கு தொலைபேசியில் மிரட்டல்

Thipaan   / 2014 நவம்பர் 16 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண சபை உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய இ.இந்திரராஜாவுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இ.இந்திரராஜாவிடம் இன்று (16) தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவிக்கையில்,

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு என உலக உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இப் பாடசாலையின் முன்னால் அதிபர் இம் மோசடியில் ஈடுபட்டதாக உலக உணவுத் திட்டத்தின் வடமாகாண அதிகாரி க.றொய்ஸ் எனக்கு தெரியப்படுத்தினார். இது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனத்துக்கும் சில அதிகாரிகளின் கவனத்துக்கும் நான் கொண்டு வந்திருந்தேன்.

இது தொடர்பிலே குறித்த அதிபர் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவற்றை ஏன் வெளிப்படுத்தியதாக மிரட்டல் விடுத்தார். இது பற்றி நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் கல்வி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.

இதேவேளை, குறித்த அதிபர் தற்போது வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபராக பொறுப்பேற்றுள்ள அதேவேளை, இவ் முறைப்பாடு தொடர்பில் வலயக்கல்விப் பணிமனை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .