2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆலயத்துக்குள் திருடமுற்பட்டவருக்கு விளக்கமறியல்

George   / 2014 நவம்பர் 22 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடலியடைப்பு ஐயனார் கோயிலுக்குள் நுழைந்து பித்தளை தட்டுக்களை திருடமுற்பட்ட சந்தேகத்தில் கைதான  சந்தேக நபரை எதிர்வரும் டிசெம்பர் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவன். வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.மஞ்சுள.டி.சில்வா, சனிக்கிழமை (22) தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை (19) வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதியினை சேர்ந்த மேற்படி சந்தேக நபர், மாலை வேளை கோயிலுக்குள் நுழைந்து பித்தளை பாத்திரங்களை திருடிக்கொண்டிருந்த வேளை வழிபாட்டுக்கு வந்திருந்திருந்த பக்தர்கள், சந்தேகநபரை பிடித்து, தம்மிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .