2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸாருக்கு சாரயம் விற்றவருக்கு தண்டம்

George   / 2014 நவம்பர் 22 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பொலிஸாருக்கு சாரயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான புங்குடுதீவினை சேர்ந்த சந்தேகநபர் ஒருவருக்கு 45,000 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.

கடந்த வாரம் மேற்படிநபர் அனுமதிபத்திரம் இன்றி சாரயப்போத்தல்களை வீட்டில் வைத்து விற்பனை செய்துள்ளார். இதன்போது, சிவில் உடையில் சென்ற பொலிஸார் தாமும் சாரயம் வாங்குவது போல் பாசங்கு செய்து, சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.

அத்துடன் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 175மில்லிலீற்றர் சாரயப்போத்தல்கள் இரண்டினையும் பறிமுதல் செய்திருந்தனர்.

மேற்படி சந்தேகநபரை வெள்ளிக்கிழமை (21) நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை, வழக்கை விசாரித்த பதில் நீதவான், சந்தேக நபருக்கு சட்டவிரோதமான முறையில் சாரயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு முன்குற்றங்கள் இருப்பதனை கவனத்தில் கொண்டு, முதல் குற்றத்திற்கு 15ஆயிரம் ரூபாயும், இரண்டாவது குற்றத்திற்கு 30ஆயிரம் ரூபாயும் அபராத தொகையாக செலுத்த உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .