2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மேலும் இரு கிணறுகளில் எண்ணெய் கசிவுகள்

George   / 2014 நவம்பர் 22 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் மின்சார சபையின் எண்ணெய் கசிவுகள் தற்போது கட்டுவன் பகுதியில் உள்ள சில கிணறுகளிலும் கசியத் தொடங்கியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் மின்சார சபையின் மின் பிறப்பாக்கியினால் வெளியிடப்படும் எண்ணெய் கசிவுகள் சுன்னாகம், மல்லாகம், கீரிமலை பகுதியில் உள்ள கிணறுகளில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கட்டுவன் மேற்கு ஜே-238 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள இரண்டு பொதுக்கிணறுகளில் எண்ணெய் கசிவு  ஆரம்பித்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பிரதேச மக்கள் அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ் எண்ணெய் கசிவு தொடர்பில் அப் பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர் ஊடாக நீர் மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனை;கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது,

இது தொடர்பில், அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகரினை அனுப்பி அறிக்கை பெற்றுள்ளதாகவும், அக் கிணறுகளில் எண்ணெய் கசிவுகளின் படிமங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில், தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .