2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கால்நடைகள் வழங்கிவைப்பு

George   / 2014 நவம்பர் 22 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளையொட்டி யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்குடன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கால்நடைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (22)  யாழ் முற்றவெளி அரங்கில் நடைபெற்றது.

இதில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு  200 பசுக்கன்றுகளும், 200 ஆடுகளும் பாடசாலை மாணவர்களுக்கு 1000 பழமரக்கன்றுகளும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதயப்பெரேரா ஆகியோர் வழங்கிவைத்தனர்.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதயப்பெரேரா,  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, மதகுருமார்கள், பயனாளிகள், பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .