2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'தாய்நாட்டின் தீர்ப்பு மஹிந்த'

Menaka Mookandi   / 2014 நவம்பர் 24 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், ரஸீன் ரஸ்மின்

ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

'தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்த' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், மூன்றாவது முறையாக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். இவரை எதிர்த்து, எதிரணியின் பொது வேட்பாளராக முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளார்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வாழ்த்து கூறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .