2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டி

Menaka Mookandi   / 2014 நவம்பர் 24 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், நவ சம சமாஜ கட்சி சார்பாக சுந்தரம் மகேந்திரன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவ சமசமாஜ கட்சி சார்பாக விக்கிரமபாகு கருணாரட்ண கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் மகேந்திரன் போட்டியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .