2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தனியார் காணியில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 26 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், யோ.வித்தியா

யாழ்ப்பாணம், நாவாற்குழி பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான 22 பரப்பு காணியொன்றில், நல்லூர் பிரதேச சபை கடந்த ஐந்து நாட்களாக, பிரதேசத்திலுள்ள குப்பைகளைக் கொட்டி வருகின்றது.

இது தொடர்பில் நல்லூர் பிரதேச தவிசாளர் பா.வசந்தகுமாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அதனை ஒத்துக்கொண்ட அவர், இது தொடர்பில் மேற்படி காணியின் உரிமையாளரிடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறினார்.

நல்லூர் பிரதேச சபை வளாகத்தில் அகற்றப்படும் குப்பைகள், மேற்படி காணியில் கடந்த ஐந்து நாட்களாகக் கொட்டப்பட்டு வருகின்றன. இருப்பினும் இது தொடர்பில், காணியின் உரிமையாளரின் அனுமதியை பிரதேச சபை பெறவில்லை.

இது தொடர்பில் தமிழ்மிரரிடம் தொடர்புகொண்ட காணியின் உரிமையாளர், நகரசபையின் இவ்வேலைத்திட்டம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டார். அத்துடன், இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக காணி உரிமையாளர் கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் தவிசாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, மேற்படி பகுதியில் குப்பைகள் கொட்டியது உண்மையெனவும் உரிமையாளரின் அனுமதி பெறாமலே குப்பைகள் கொட்டப்பட்டதாகவும் ஒத்துக்கொண்டார்.

அத்துடன், மேற்படி காணியின் உரிமையாளர் இது தொடர்பில் தன்னிடம் செவ்வாய்க்கிழமை (25) முறையிட்டதாகவும் இவ்விடயத்தில் அவரது அனுமதியைப் பெற்று, அந்த காணியிலேயே குப்பைகளைக் கொட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தவிசாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .