2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் மாவீரர் தினம் இல்லை: பொலிஸ்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 26 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கையில் மாவீரர் தினம் என்று ஒன்றும் இல்லை. ஆகையால் இல்லாத தினத்தை கொண்டாட முடியாது. அதற்கு அனுமதியளிக்கவும் முடியாது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.

மாவீரர் தினத்தை கண்காணிப்பதற்காக விசேட புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மாவீரர் தினத்துக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். எதிர்ப்புக்களை மீறி மாவீரர் தினத்தை கொண்டாட முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன், அத்தினத்தில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அனுமதியளிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

பொதுமக்களை உசுப்பேற்றி, அவர்களை ஏமாற்றும் சதியில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த சக்திகளை நம்பி ஏமாறவேண்டாம். எவ்விதத்திலும் வடக்கில், மாவீரர் தினம் கொண்டாட அனுமதி கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .