2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வெள்ள நிவாரணங்களை உடனடியாக வழங்கவும்: டக்ளஸ்

George   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, புதன்கிழமை (26) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெள்ள நிவாரணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதியளவு மாவட்ட செயலகத்தின் கையிருப்பில் உள்ளது.

எனவே குறித்த பிரதேச செயலாளர்கள் உடனடியாக  யாழ். மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு அதற்குரிய நிதியை பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் இந்தியன் வீட்டுத்திட்ட புள்ளி முறையை உரிய அதிகாரிகளுடன் கதைத்து மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யவுள்ளேன்.

இந்தியன் வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பின் அதை மாகாணசபை உறுப்பினர்கள் தெரியப்படுத்தினால் வெளிப்படையான விசாரணைகள் செய்ய முடியும்.

பழமரக்கன்றுகளை, விதைகள் என்பவற்றை வெளி மாவட்டத்தில்  இருந்து கொள்வனவு செய்யாமல் இங்கிருந்தே விதைகள் கன்றுகளை பெற்று, உரிய காலத்துக்கு ஏற்றவாறு நடுகை செய்வதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என டக்ளஸ் மேலும் கூறினார்.

அத்துடன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதியும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மறுநாள் 9 ஆம் திகதியும் அந்தந்த மாவட்ட செயலகங்களில் இடம்பெறும் என டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .